• Apr 20 2024

தயாரிப்பாளர் பரிசளித்த காரை வேணாம் என்ற 'லவ் டுடே' இயக்குநர்... அதற்குப் பதிலாக என்ன கேட்டார் தெரியுமா...?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இன்றைய சினிமா உலகில் இளைஞர்கள் மத்தியில் கொடி கட்டிப் பறந்து வரும் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் குறும்படங்களை இயக்கி அதன் மூலம் பட வாய்ப்பை பெற்றவர். அந்தவகையில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான 'கோமாளி'  திரைப்படம் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார். 

அப்படத்தில் பல வருடங்களாக கோமா நிலையில் இருந்த ஒருவர் அதிலிருந்து மீண்டு வரும்போது என்ன நடக்கும் என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருந்தார் பிரதீப். இப்படம் ஆனது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 


மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார். அதுமட்டுமல்லாது இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்கிய படம் தான் 'லவ் டுடே'.

இப்படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அப்படத்தில் அதன் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ளார் பிரதீப். ரிலீசான முதல் நாளில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை இன்று தமிழ் சினிமா மட்டுமன்றி உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது. 


மேலும் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு யாருமே எதிர்பார்க்காத இன்று ரூ.100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது லவ் டுடே. இப்படத்தின் உடைய வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. 

இந்நிலையில், கோமாளி பட வெற்றிக்கு பின் அவருக்கு தயாரிப்பாளர் பரிசாக கொடுத்த காரை அவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது. 

அதாவது கோமாளி படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அவருக்கு புது கார் ஒன்றை பரிசாக வழங்கினார். ஆனால் "அந்த கார் இருந்தால் அதற்கு பெட்ரோல் போடவே நிறைய பணம் செலவாகும் என்பதால், அதனை திருப்பி கொடுத்து அந்த காருக்கான தொகையை தனக்கு பரிசாக கொடுத்தால், தான் அடுத்த படம் எடுக்கும் வரை அது எனக்கு பயனுள்ளதாக இருக்கும்" என கேட்டாராம் பிரதீப். 

இந்தத் தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement