Ex போட்டியாளர் என்ன கூறினார் தெரியுமா .. வீட்டை விட்டு வெளியே போன பிரியங்கா! நடந்தது என்ன?

248

தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சென்சேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

அத்தோடு 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக் பாஸிலிருந்து தற்போது டாப் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளார்கள்.இதில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் 5வது சீசன் போட்டியாளர்கள், பொங்கல் பண்டிகை மற்றும் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியை ஒட்டி ஒன்றாக சங்கமித்துள்ளனர். முன்னதாக சுருதி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே பாவனியின் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு சுருதியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நட்பாக இருந்து வந்தவர் பாவ்னி.

மேலும் பாவ்னி, பிக்பாஸ் வீட்டுக்குள் சுருதி, வந்ததுமே ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக் கொண்டார். வந்தவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செம்ம அட்ராசிட்டியை செய்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் தாமரை மீண்டும் சிறப்பு கெஸ்ட்டாக வருகை தந்துள்ளார்கள்.அவரைப் பார்த்தவுடன் போட்டியாளர்கள் பெரும் ஆராவரத்துடன் அவரை வரவேற்று குத்தாட்டம் எல்லாம் போட்டார்கள்.

இதேபோல், அக்‌ஸராவும், வருணும் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்தனர். குறிப்பாக அக்‌ஷராவை பார்த்ததும் தாமரை கட்டித் தூக்கி சுற்றினார்.

எனினும் நிரூப் ஹேர் கட் பண்ணிய பிறகு ஸ்மார்ட் ஆகிவிட்டதாக அக்‌ஷரா கமெண்ட் அடித்தார். முன்னதாக சுருதியும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தவுடனேயே நிரூப் ஹேர் கட் பண்ணிவிட்டு ஹீரோ மாதிரி ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

அப்போது பிரியங்காவிடம் பேசிய சுருதி, “உங்களின் ஒரே பிரச்சனை வரும்போது பொங்கி எழுந்துவிடுவிர்கள். என்ன நடந்தாலும் நீங்கள் உங்கள் நிலையை இழக்காமல் இருக்கிறீர்கள்.!” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நாயகர்கள் கலந்துகொள்வதற்காக வரவழைக்கப்பட்டனர். முன்னதாக இவர்களை வரவேற்று இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ராஜூ மற்றும் பிரியங்கா இருவரையும் பிக் பாஸ் நியமித்திருந்தார்.

எனினும் இதற்காக ராஜூ மற்றும் பிரியங்கா இருவருமே தயாராகிவிட்டனர். அப்போது பிரியங்கா திடீரென்று கால் வலி என்று பாத்ரூமில் சென்று அமர்ந்து கொண்டார். அவரை பின்தொடர்ந்து சென்ற ராஜூ என்ன ஏது என்று விசாரிக்கும் போது பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இதுதான் தனது கடைசி நாள் என்றும் தனக்கு கால் வலி இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இது எப்படி சரியாகும்? இதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த வலி எப்படி இருக்கும் என்று ராஜூ கேட்கிறார் அப்போது பதில் சொன்ன பிரியங்கா கரைச்சலாக இருக்கும், ஸ்கேன் பண்ணி பார்த்தால் தான் தெரியும் என்று சொல்லி தன் வலியை கடத்துவதற்கு முயற்சிக்கிறார்.

எனினும் இதனை தொடர்ந்து பிக்பாஸ் பிரியங்காவை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து, “உங்களை இப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்!” என்று குறிப்பிடுகிறார். அதன்படி பிரியங்கா மருத்துவமனைக்கு சென்று தனக்கு ஸ்கேன் செய்துவிட்டு தன் உடல்நிலை பற்றி அறிவிப்பார் என்று சொல்லிவிட்டு, சத்தமின்றி செல்கிறார்.

மேலும் பிரியங்காவின் இந்த திடீர் உடல்நிலை பிரச்சனை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதித் தருவாயில் நிகழ்வது பல ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது, எனினும் பிரியங்கா விரைவில் முழுமையாக நலம்பெற்று வரவேண்டும் என்று பல ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசனில் 102வது எபிசோட்டில்நடந்தது என்ன என்பதை அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்து பார்க்கவும்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: