7 வருடத்திற்கு முன் சினேகனும் கன்னிகா எப்படியிருந்தார்கள் தெரியுமா ?

2169

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந் நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 1இல் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றியவர் தான் சினேகன். மேலும் இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் பாண்டவர் பூமி படத்தில் அனைத்துப் பாடல்களும் எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர்.இதனைத் தொடர்ந்து சாமி, சூரரைப் போற்று, ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

அத்தோடு 700க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் தான், பிரபல நடிகை கன்னிகா, சினேகனுக்கு, கமல் ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில்இவர்கள் இருவரும் இணைந்து 7 வருடத்திற்கு முன்பே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை நடிகை கன்னிகா ‘ என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது ‘ என்ற பதிவுடன் பதிவிட்டுள்ளார்.