பிக்பாஸ் வீட்டிற்குச் செல்ல முதல் சஞ்சீவ் என்ன கூறியுள்ளார் தெரியுமா?- வைரலாகும் வீடியோ

250

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கிய தொலைக்காட்சியான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 5 வது சீசன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவரை இந்த வீட்டை விட்டு 6 பேர் வெளியேறியுள்ளனர். இறுதியாக இசைவாணி வீட்டை விட்டு வெளியேறினார்.

இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அமீர் என்பவர் முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இதனிடையே தற்போது இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகரும் தொகுப்பாளருமான சஞ்சீவ் வெங்கட் இன்று நுழைந்துள்ளார் என்ற புரொமோக்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது சஞ்சீவ் வெங்கட் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சஞ்சீவ் ” நான் இங்கு இருப்பது போல தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இருக்க போகிறேன். சண்டை வந்தால் சண்டை போடுவேன்” என கூறியுள்ளார்.

அந்தோடு அந்த வீடியோவில் தொகுப்பாளர் தீபக் மற்றும் சஞ்சீவின் மனைவி ஆகியோர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.