• Jun 03 2023

மெலிந்த உடலை பழைய நிலைமைக்கு கொண்டு வர ரோபோ சங்கர் என்ன செய்கிறார் தெரியுமா..?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை  அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். 

எனினும் இதனைத் தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது.

ரோபோ சங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார். ஆனால் தற்போது பார்க்கவே பரிதாபமாக மாறி விட்டார்.    

அத்தோடு உடல் எடைக்குறைந்ததற்கு அவருக்கு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்து வந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில்  ரோபோ சங்கர் ஜிம்மில் வேர்க்அவுட் செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை அவரது மனைவி பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.



Advertisement

Advertisement

Advertisement