• Mar 29 2024

வாரிசு திரைப்படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வம்சி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, ராஷ்மிகா மந்தனா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.வாரிசு திரைப்படம் குடும்பங்கள் ரசிக்கும் படமாக அமைத்துள்ளது என பலரும் பாசிட்டிவ்வான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.வாரிசு படத்தை பார்க்க லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் வந்தனர்.


 இப்படத்தின் இசையமைபாளர் தமன் படத்தை பார்த்துவிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.இந்நிலையில் வாரிசு படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா படத்தை பார்த்துவிட்டு மகழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வாரிசு படமானது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில்  உலகளவில் ரூ.26.5 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் ரூ.5 கோடி வசூலித்து உள்ளது. அதேபோல் கேரளாவில் இப்படம் ரூ.3.5 கோடி கலெக்‌ஷனை வாரிக்குவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement