• Apr 20 2024

திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன் நயன்தாரா எப்படி இருந்துள்ளார் தெரியுமா? பாருங்க!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


அதுமட்டுமல்லாமல் நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.


 இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.


இந்நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.


மேலும் டாப் நடிகையாக திரையுலகில் இருந்து வரும் போதே இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


சமீபத்தில் தான் வாடகை தாயின் மூலம் இவர்கள் இருவரும் பெற்றோராகினர். மேலும் திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா.


இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிமுகமாகும் முன்பு எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..


Advertisement

Advertisement

Advertisement