• Mar 28 2023

13ஆண்டுகள் கடந்தும்... சமந்தாவின் அந்தக் காதலை மறக்காத நாகசைதன்யா.. என்ன செய்துள்ளார் தெரியுமா..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவும், சமந்தாவும் இணைந்து நடித்திருந்தார்கள். தெலுங்கு ஜெஸியாக சமந்தா அப்படத்தில் நடித்தார். 


இந்தப் படத்தில் நடித்தபோது தான் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இரு வீட்டாரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து ஒரு சில ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர்கள் நான்காவது திருமண  நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.


இந்நிலையில் 'ஏ மாய சேசாவே அதாங்க' விண்ணைத் தாண்டி வருவாயாவின் தெலுங்கு ரீமேக் ரிலீஸாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடினார்கள். அது தொடர்பான ட்வீட்டுகளை பார்த்த சமந்தாவோ, ரசிகர்களின் அன்பில் செய்வதறியாது ஆடிப் போய்விட்டார்.


மேலும் எப்பொழுதும் தன் மீது அன்பு காட்டும் கோடான கோடி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நாக சைதன்யாவோ 'ஏ மாய சேசாவே' பட ஸ்டில்ஸை தனது இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார். அதில் ஜெஸி தன்னை காதலித்ததும், பிரேக்கப் செய்து காயப்படுத்தியதும் இன்னும் மறக்கவில்லை என்பது போன்று அவரின் போஸ்ட் அமைந்திருந்தது.


நாக சைதன்யாவின் இன்ஸ்டா ஸ்டோரீஸை பார்த்த சமந்தா ரசிகர்கள் "சமந்தா பாவம். தனியாக கஷ்டப்படுகிறார். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். தயவு செய்து அவருடன் மீண்டும் சேர்ந்து வாழவும். உங்களுக்கு ஏற்ற ரீல் ஜோடி மட்டும் அல்ல ரியல் ஜோடியும் சமந்தா தான். உங்களை மீண்டும் சேர்ந்து பார்க்க ஆசைப்படுகிறோம்" என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement