• Sep 22 2023

தான் இறக்கப்போவதை முன்பே கணித்த மாரிமுத்து... என்ன கூறியுள்ளார் தெரியுமா... கண் கலங்க வைத்த வீடியோ..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து பின்னர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கி இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் நடிகர் மாரிமுத்து. இதனைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து சமீபகாலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகிப்பதற்கு முக்கிய காரணமே இவரின் அசால்ட்டான நடிப்புத்தான்.


இந்த சீரியலில் ஒரு சீனில் மாரிமுத்து தனக்கு மாரடைப்பு வருவதைப் போல் இருப்பதாகவும், வலி வந்து அழுத்துவதாகவும், ஏதோ செய்வதாகவும், அது உடம்பில வருகிற வலியா? இல்லேன்னால் மனசில வாற வலியா என்று தெரியல, இந்த நெஞ்சுவலி வந்து எனக்கு ஏதோ எச்சரிக்கை பண்ணுவது போல் தோணுகிறது, எனக்கு ஏதோ கெட்டது நடக்கபோது போல் தெரியுது, " எனக் கூறியுள்ளார். ஆனால் தற்போது மாரிமுத்து உண்மையிலும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்.


இந்த விடயம் ரசிகர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இதனையடுத்து "மாரிமுத்து தான் இறக்கப் போவதை முன்பே கணித்து விட்டார்" எனப் பலரும் கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement