• Apr 24 2024

தளபதி 67 படத்தின் ஸ்க்ரிப்ட்- டீசரால் இம்ப்ரஸான கமல்- அடடே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வசூல் வேட்டையாடி வரும் நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது. 

விஜய்யும் லோகேஷ் கனகராஜும் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில் மீண்டும் தளபதி 67 படத்தில் இருவரும் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


தளபதி 67 படத்தில் இந்த படத்தில், அர்ஜுன் வில்லனாக நடிப்பதாகவும் இதற்காக அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசன் இப்படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காலை தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனிடையே தளபதி 67 படத்தன் ஸ்க்ரிப்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்க்கான இந்தக் கதையை கொரோனா லாக்டவுன் நேரத்திலேயே தயார் செய்து விட்டாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மேலும் படத்திற்கு டீசர் ஒன்றும் ரெடியாகிவிட்டதாம்.


இந்த டீசரை நடிகர் கமல்ஹாசனிடம் போட்டுக் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். டீசர் மாஸாக இருப்பதை பார்த்த கமல்ஹாசன், படத்தில் தனக்கு கேமியோ அப்பியரன்ஸ் வேண்டாம், 20 நிமடத்திற்கு காட்சி கொடுங்கள் என கேட்டுள்ளாராம். வழக்கமாக மற்ற ஹீரோக்களின் படங்களில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்க மாட்டார் நடிகர் கமல்ஹாசன்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் மீதுள்ள அபரிமிதமான அன்பால் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளாராம் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. கமலின் கெரியரில் இல்லாத அளவுக்கு வசூலை குவித்ததே கமல் இப்படி இறங்கி வர காரணம் என்கிறார்கள் . தளபதி 67 படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement