• Mar 28 2024

'இந்தியன் 2' படத்திற்காக கமல்ஹாசன் என்ன செய்தாரு தெரியுமா?ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும்  'இந்தியன் 2'படத்திற்கான  படப்பிடிப்பு திருப்பதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு துவங்கப்பட்டது. கொரோனா லாக்டவுன், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்காமல் தேங்கி நின்றது. இந்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும்தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

இதனைத் தொடர்ந்து கொரோனா, லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்கப் படாமலேயே இருந்தது. இதனால் தனது அடுத்தடுத்த பட வேளைகளில் இறங்கினார் ஷங்கர்.

இதனிடையில் ராம்சரண் நடிப்பில் 'ஆர்சி 15' படத்தை இயக்க துவங்கினார். இந்நிலையில் 'இந்தியன் 2' பிரச்சனைகள் எல்லாம் பேசி தீர்க்கப்பட்டு 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. மேலும், அண்மையில் கமலின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கவனம் ஈர்த்ததுடன் நல்லவரவேற்பையும் பெற்றது.


கடந்த ஒரு மாதமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது திருப்பதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இங்கு கமல் நடிக்கும் சேனாபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், வனப்பகுதியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு கமல் ஹெலிகாப்டரில் சென்று வருகிறார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement