ஜான்வி கபூர் இயக்குனர் பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா !

129

நடிப்பதற்கு முன்னமே சிலர் அதற்கான படிப்பை முடித்து நடிக்க வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஜான்வி கபூர் ஒருவர். இவர் காலம் சென்ற முன்னனி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி மற்றும் வலிமை , நேர் கொண்ட பார்வை என்ற தல அஜித் நடிக்கும் படங்களை தயாரித்து வரும் போனி கபூரின் மகளும் ஆவார். இவர் மாடலாகவும் காணப்படுகின்றார்.சில் தொலைக் காட்ச்சி நிகழ்ச்சியிலும் கலந்துள்ளார். அது மட்டும் இன்றி இவர் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘ஹெலன்’. மாத்துக்குட்டி சேவியர் என்பவர் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். அன்னா பென் என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதன் தமிழ் ரீமேக்கில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்க, அன்பிற்கினியாள் என்கிற பெயரில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் இந்த வருடம் வெளியானது.

மற்றும் இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் இவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மற்றும் மலையாளத்தில் ஹெலனை இயக்கிய மாத்துக்குட்டி சேவியரே ஹிந்தியிலும் இயக்கியுள்ளார். இப் படத்தை இவரின் தந்தை போனி கபூர் தயாரித்து வருகின்றார் என்பதும் கூறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் சமீபத்தில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். அது மட்டும் இன்றி இவர் ‘இப்படிப்பட்ட அற்புதமான ஒரு இயக்குனருடன் இணைந்து பயணித்தது நல்ல அனுபவம்’ என அவருக்கு நன்றி கூறியுள்ளார்.

அதேபோல மாத்துக்குட்டி சேவியரும், இவர் சிறப்பாக ஒத்துழைத்து நடித்ததை பாராட்டும் விதமாக, பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது: ‛‛நீங்கள் இல்லையென்றால் நான் ரொம்பவே கவலைப்பட்டு போயிருப்பேன். நீங்கள் எனக்காக செய்த எல்லாவற்றுக்கும் நன்றி. இதை ஒருபோதும் மறக்க மாட்டேன் நன்றி’ எனக் கூறியுள்ளார்.