அதிக தொகைக்கு வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்ட தல அஜித்தின் படம் என்ன தெரியுமா!

141

திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை கொண்டு காணப்படுபவர் தல அஜித். இவர் பல ரசிக பட்டாளத்தை தன் வசம் கொண்டுள்ளார். இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் மற்ற நடிகர்களுக்கு முன்மாதி என்று சொல்லும் அளவிற்கு எல்லா விதத்திலும் மக்களை கவருபவராக காணப்படுகின்றார்.இவர் காதல் கோட்டை என்ற படத்தின் மூலம் மிக பரவலாக பேசப்பட்டார்.

இவர் தற்போது வலிமை படத்தை நடித்து முடித்து மற்றுமொரு படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் சில சண்டைக் காட்ச்சிகள் மற்றும் சில பைக், கார் ரேஸ் போன்ற காட்ச்சிகளில் டூப் போடாமல் நடித்து வருகின்றார் என்பதும் இவரின் ரசிகருக்கு பெருமை என்று கூறலாம். இவர் தற்போது சுற்றுலா சென்று வெளியான புகைப் படம் செம வைரலாகி வருவதையும் காணமுடியும்.

இந்த நிலையில் இவர் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடித்துள்ள படம் வலிமை. இப் படத்தை ஹூமாகுரோசி, கார்த்திகேயா என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.

மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வலிமை படத்தையும் போனிகபூர் தயாரித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளன. இப்படம் 2022 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளில் வலிமை படத்தை வெளியிடும் உரிமையை ஹம்சினி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் இதுவரை வெளியான இவரின் படங்களையெல்லாம் விட வலிமை படம் அதிகப்படியான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.