• Apr 23 2024

சீரியல் நடிகை ரித்திகாவின் கணவரின் பெயர் என்ன தெரியுமா?- மருதாணி எப்படி அழகாக சிவந்திருக்கின்றது என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் என்பன ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சீரியல் மூலம் அறிமுகமாகியவர் தான் ரித்திகா.

 இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பாக்யாவின் இரண்டாவது மகன் எழிலின் காதலி அமிர்தா கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வருகிறார். 


சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரித்திகா,அண்மையில் விஜய் டிவி பிரபலம் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வைரலாகின.

அந்த வகையில் தற்பொழுது தனது கணவரின் பெயரை கையில் மருதாணியுடன் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே இது தான் ரித்திகாவின் கணவரின் பெயரா? என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





 

















Advertisement

Advertisement

Advertisement