நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

351

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர்களில் சிரஞ்சீவி என்பவரும் ஒருவர். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழித்திரைப் படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் அன்றி ரீமேக் படங்களில் நடிப்பதிலும் முன்னுரிமை வழங்கி வருகின்றார். அவர் தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து மலையாளத்தில் உருவான லூசிபர் என்ற படத்திலும் மற்றும் தமிழில் வேதாளம் என்ற படங்களிலும் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் தற்போது நடித்து வருகின்றார்

அந்த நிலையில் தற்போது சில காலங்கள் அறுவை சிகிச்சை காரணமாக நடிப்பதில் இருந்து விலகி இருந்து ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இன் நிலையிலும் மீண்டும் நடித்து வருகின்றார் என்பதும் கூறிப்பிடத்தக்கது அது மடடும் இன்றி நிலையில் தன்னை தேடி வந்து மருத்துவ செலவுக்கு உதவும் கேட்பவர்களுக்கும் உதவி செய்து வருகின்றார். தற்போது தனது ரசிகர் ஒருவருக்கு உதவிக்கரம் செய்துள்ளார்.

இவரை அலுவலகத்துக்கு தேடிவந்த வெங்கட் என்கிற ரசிகர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக பெரிய அளவில் பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். அதை பொறுமையாக கேட்டுக்கொண்ட இவர் எதற்கும் இன்னொரு மருத்துவமனையில் நோயின் உண்மைத்தன்மை குறித்து சோதனை செய்துகொள்ளுமாறு கூறி அவரே ஒரு ஒரு பிரபல மருத்துவ மனையையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு ஆரம்பகட்ட செலவுக்காக இரண்டு லட்சம் கொடுத்த இவர் சிகிச்சைக்கு செலவாகும் தொகை முழுவதையும் தான் கொடுப்பதாக கூறியுள்ளார் இவர் இப்படி செய்ததால் அந்த சிகச்சை பெற்றவர் இணையத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். அதாவது ‘நான் அவரது ரசிகன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவருக்கு நன்றி சொல்ல என் வாழ்நாள் முழுதும் போதாது’ என தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளாராம்.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  6. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  7. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  8. முதல்முறையாக வெளியான விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்..குஷியில் ரசிகர்கள்…!
  9. ரீமேக்ரீமேக்காகும் பீம்லா நாயக் படத்தின் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா !
  10. பிக்பாஸ் வீட்டுக்குள் கதறி அழும் இலங்கைப்பெண்-இது தான் காரணமா? வெளியானது புரமோ..!

சமூக ஊடகங்களில்: