சர்வைவர் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது என்ன தெரியுமா?- இப்பவே சண்டை ஆரம்பிடுச்சு

245

தமிழில் பிரபல்மயமான தொலைக்காட்சியில் ஒன்றான ஷீ தமிழில் 12ம் திகதி “சர்வைவர்” என்னும் நிகழ்ச்சி புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் 16 போட்டியாளர்கள் பங்குபற்றி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இவர்களை காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு குழுக்களாகப் பிரித்துள்ளனர்.மேலும் இந்த இரு குழுக்கழுக்குமான தலைவர் போட்டியானது இன்று இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் முதலில் தலைவர் போட்டிக்காக ஒவ்வொரு குழுவிலும் இருந்து 4 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் காடர்கள் குழுவில் இருந்து விஜயலக்சுமி காயத்திரி லேடி கேஷ் இந்துஜா போன்றோர் முன்வந்தனர். அதேபோல வேடர்கள் குழுவில் இருந்து லக்சுமி ப்ரியா அன்ஜித் ஜஸ்வர்யா ஆகியோர் முன்வந்தனர்.

இதில் முதலில் வாக்களிக்கும் போட்டி இடம் பெற்றது அதில் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு பேரும் தீபம் போன்ற அமைப்புக் கொண்ட ஓர் தடியை வைத்திருத்தல் வேண்டும் அதில் மற்றவர்கள் தமக்கு பிடித்தவர்களைச் சொல்லி அதற்கான காரணமும் என்ன என்று சொல்லி ஓர் மாலையைக் கட்டி விட வேண்டும்.

அந்த வகையில் அந்த தெரிவு மூலம் அதிக விருப்பு வாக்குகளுடன் காடர்கள் குழுவில் இருந்து காயத்திரி மற்றும் லேடி காஷ் தெரிவுசெய்ப்பட்டனர் வேடர்கள் குழுவில் இருந்து லக்சுமிப்ரியா மற்றும் ஜஸ்வர்யா ஆகியோர் அடுத்த போட்டிக்குத் தெரிவாகினார்கள். அடுத்த போட்டி என்னவென்றால் போட்டிக்குத் தெரிவாகிய இருவருள் ஒருவர் பந்துமாதிரி ஒன்றால் எறிந்து மரக்குற்றிகளுக்கு மேல் அடுக்கப்பட்டிருக்கும் போத்தல்களை உடைக்க வேண்டும் ஒருவர் அதனை தடுக்க வேண்டும்.

இந்த நிலையில் இப் போட்டியில் காடர்கள் மற்றும் வேடர்கள் குழுவிற்கு காயத்திரி லக்சுமி ப்ரியா ஆகியோர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இப் போட்டியின் பின்பு இருவரும் தமது தங்குமிடங்களுக்குச் சென்றனர். இங்கு வேடர்கள் தமக்குத் தேவையான உணவைத் தாமே தேடிக் கொண்டனர். அதில் பப்பாசிப்பழத்தை சிலரும் இளநீரை சிலரும் உண்டனர்.

பின்பு பார்வதிக்கும் அவர் குழுவில் உள்ள ஏனைய போட்டியாளர்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டதோடு நிகழ்ச்சியும் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.