• Sep 22 2023

போதை தலைக்கேறி பிரபல நடிகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட த்ரிஷா- உண்மையை உடைத்த பிரபலம்- நடந்தது என்ன தெரியுமா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் த்ரிஷா. முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து இவர் மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார்.

அதிலும் அவர் குறிப்பாக விஜய்யுடன் நடித்த கில்லி திரைப்படம் இவருடைய கெரியரில் நல்ல திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.சில காலம் படவாய்ப்பின்றி இருந்த இவர் 96 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். அதிலும் பொன்னியின் செல்வன் என்னும் படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.


இவர் தற்பொழுது நடிகர் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து லியோ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது.இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு அவர்கள் த்ரிஷாவை குறித்த சில விஷயங்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது 

த்ரிஷாவுக்கு ஒரு காலகட்டத்தில் குடிப்பழக்கம் அதிகமாக இருந்தது உண்மைதான், அப்பொழுது ஒரு மிகப்பெரிய நடிகருடன் ஒரு படத்தில் அவர் நடித்து வந்திருந்தார், அப்பொழுது படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த இடைவெளியில், அந்த ஹீரோவும் அவரும் ஒன்றாக இணைந்து மது குடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் த்ரிஷாவிற்கு மது போதை தலைக்கேரிய நிலையில், கேரவனில் இருந்த அந்த டாப் நடிகருடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்.


இது அப்போது பல பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தது, ஆனால் த்ரிஷா அதற்கு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் செய்யாறு பாலு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement

Advertisement