• Mar 29 2024

நேரடியாக live வந்து ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் தனலட்சுமியின் அம்மா... என்ன கூறியுள்ளார் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் கலந்து கொண்டு பலராலும் அறியப்பட்ட ஒருவரே தனலட்சுமி. போட்டியாளர்கள் ஒவ்வொருவருடைய சொந்தக் கதையை கேட்டு விட்டு எல்லாருமே அமைதியாக இருந்து விட்டு பின்னர் ஒப்பாரி வைச்சது என்றால் அது தனலட்சுமியோட கதை கேட்டுத்தான்.


அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முதல் இவர் டிக்டாக் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமானார். டிக்டாக்கில் இவரை எல்லோருமே சுகி என்று தான் அழைப்பார்கள். இவரின் அம்மா பெயர் தேவி. இவருக்கு ஒரு சகோதரரும் உண்டு.


இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற நாள் முதல் இன்றுவரை பல எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகின்றார். அதிலும் குறிப்பாக இவர் சக போட்டியாளர்களுடன் எதற்கு எடுத்தாலும் முட்டி மோதுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது தனலட்சுமியின் அம்மா லைஃப் வந்து தனது மகள் சார்பாக ரசிகர்கள் கேட்கும்  கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார். இந்நிலையில் அவர் கூறுகையில் "பிக்பாஸில் வாய்ப்புக் கிடைத்ததே ரொம்பப் பெரிய விஷயம். அதனால் தான் யாருக்குமே இதுவரைக்கும் நான் இண்டர்வியூ கொடுக்க சம்மதிக்கல" எனக் கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமில்லாது ரசிகர்கள் பலர் தனலட்சுமி ஏன் இப்படிக் கோப படுகின்றார், எனக் கேட்டிருக்கின்றார். அதற்கு அவரின் அம்மா "தனலட்சுமிக்கு கோபம் கொஞ்சம் அதிகமாகவே வரும். ஆனாலும் வந்து அடுத்த நிமிஷத்திலேயே அந்தக் கோபம் போய்டும். 

மேலும் "எல்லாரையும் தனலட்சுமி பேச விடுவாள், ஆனால் சடடென்று கோபம் வந்தால் தான் யாரையுமே பேச விட மாட்டாள்" எனவும் கூறி இருக்கின்றார். என் பொண்ணுக்காகத் தான் நான் லைப்பில் வந்திருக்கேன். என் என்றால் அது ரொம்ப சின்னப் பிள்ளை" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு "அவள் போன உடனவே சும்மா வதந்தியை கிளப்ப ஆரம்பிச்சிட்டிடாங்க. அதால தான் அவங்க நிண்டாலும் குத்தம், உட்க்கார்ந்தாலும் குத்தம் என்று அவளை பற்றி புரளி பேசுறாங்க" எனக் கூறியிருக்கின்றார் அவரின் அம்மா. இவ்வாறாக ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கும் கூச்சமின்றி பதிலளித்து வருகின்றார் தனலட்சுமியின் அம்மா.

Advertisement

Advertisement

Advertisement