• Apr 19 2024

மூன்று கதாநாயகிகளோடு இணையும் தனுஷ்- அந்த படத்தில் ராஷி கண்ணா என்ன கேரக்டர் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் மாறன். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வாத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைபடம் தான் ‘திருச்சிற்றம்பலம்’.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

இப் படத்தில் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், கென் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் இப்படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இவ்வாறு இருக்கையில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கேரக்டர்கள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது

மேலும் அந்த வகையில் ராஷி கண்ணா கேரக்டர் அனுஷா என்றும் அவர் தனுஷின் பள்ளி தோழி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான புகைப் படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement