பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்

788

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மேலும் இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 5 வது சீசன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றி வரும் போட்டியாளர்களில் முக்கியமானவர் தான் இமான் அண்ணாச்சி.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர், சினிமா மீதுள்ள மோகத்தினால், சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார். ஆனால் இவருக்கு சரியான வாய்ப்புக் கிடைக்காததால் தனது பசியை போக்கிக்கொள்ள ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கிருந்துகொண்டே வாய்ப்பு தேடி அலைந்துகொண்டே இருந்துள்ளார்.

மேலும் இந்த மளிகை கடை வேலையில் கிடைக்கும் சம்பளத்தை தனது குடும்பத்தினருக்கும் அனுப்பிவைத்துள்ளார். தங்குவதற்கு இடம் இல்லாத இவர் பகலில் மளிகை கடையிலும், இரவில் சென்னை பனகல் பார்க்கில் படுத்து உறங்கியுள்ளார். ஆனாலும் தனது சினிமா ஆசையை விட்டுவிடாத அவர் நேரம் கிடைக்கும்போதேல்லாம் சினிமா வாய்ப்பு தேடி பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார்.

அத்தோடு இப்படியே 18 ஆண்டுகள் கடந்த நிலையில் கடைசியாக மக்கள் தொலைக்காட்சியில், கொஞ்சம்அரட்டை, கொஞ்சம் சேட்டை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.அதன்பிறகு கலக்கப்போவது யாரு சீசன் 1ல் பங்கேற்கும் வாய்பை தனது வறுமை காரணமாக நழுவவிட்ட இமான் அண்ணாச்சி தனது 40-வது வயதில், சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சியின மூலம் வாழ்க்கையையே மாற்றிக்கொண்டார். அதைத்தொடர்ந்து சுட்டி குட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் இதனைத் தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சென்னை காதல் மற்றும் தலைநகரம் படத்தில் ஒரு சில காட்களில் நடித்திருந்த இவர், அதன்பிறகு சூர்யாவின் வேல் படத்தில் கரடிமுத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து வேட்டைக்காரன், அங்காடித்தெரு, கோ, நீர்பறவை, ஜில்லா, கோலி சோடா, நிமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இமான் அண்ணாச்சி கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், பலருக்கு சாப்பாடு வழங்கியும் தனது சமூக பணிகளை தொடங்கினார். அத்தோடு தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே நான் எதை பற்றியும் கவலைப்படவில்லை. எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயும் நான் எல்லோரையும் சிரிக்க வைப்பேன்” என்று கூறிவிட்டு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: