மக்கள் செல்வன் தவறவிட்ட இரண்டு படங்கள் என்ன தெரியுமா?

138

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளியாகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன. ஒரு நடிகராக ஒரு பாடகராக ஒரு தயாரிப்பாளராக ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது சரியான மூவ்மெண்ட்களை கலையுலகில் காட்டி தன்னை லைம்லைட்டிலேயே தக்க வைக்கிறார் விஜய் சேதுபதி.

பேட்டி ஒன்றில் மக்கள் செல்வனிடம் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகிறீர்களே நீங்கள் தவறவிட்ட படம் ஏதும் இருக்கா என கேள்வி கேட்கப்பட்டது . அதற்க்கு நான் இரண்டு படங்களை தவறவிட்டேன் ஒன்றுக்கு வருந்தினேன் . மற்றைய படத்துக்கு வருந்தவில்லை என்றார்.

பல படங்களுக்காக சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காகவும் கொடுத்த நாட்களை மீண்டும் பெற முடியாத சூழ்நிலைகளாலும் அப்படியான நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றும் கூறினார்.இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்திற்கு என்னை கேட்டார்கள் அப்போது ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் அதற்காக கொஞ்சம் வருந்தியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த படத்தில் ஹரிஷ் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்தார். கைதி படத்திற்கும் எனக்கே முதல் வாய்ப்பு வந்தது. அதையும் சில சூழல்களால் மறுக்கவே இயக்குநர் கார்த்தியிடம் சென்றார். ஆனால் அந்த படத்திற்காக நான் வருந்தவில்லை என்றும் கார்த்திக்கு சரியான கதையாக பொறுந்திய கைதி என்னை விட நல்ல மாஸ் ஓப்பனிங் தந்தது என்றும் கூறியுள்ளார்.