• Apr 24 2024

அசிம் பற்றி ADK போட்ட ட்வீட்...என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம் தற்போது ஏழு போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்காக கொடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக லுங்கி மற்றும் பனியன் தான் அசிம் அணிந்து வலம் வந்திருந்தார். அவரைப் போல அமுதவாணனும் பிரவுன் நிற தலைமுடியுடன் இருக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து முந்தைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்த பின் Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் சில டாஸ்க்குளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட அதன் காரணமாக சில பிரச்சனைகளும் நடைபெற்றது.

இப்படியாக இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கமல்ஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி இருந்தார். எனினும் அப்போது போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார். போட்டியாளர்களிடையே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கான அசத்தல் பதில்களையும் பெற்றிருந்தார் கமல்ஹாசன். இதற்கடுத்து ADK வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள ADK, அசிம் குறித்து ட்வீட் செய்துள்ள விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.பிக் பாஸ் வீட்டிற்குள் ADK மற்றும் அசிம் ஆகியோர் சிறந்த நண்பர்களாக இருந்த அதே வேளையில், நிறைய முறை சண்டையும் போட்டுள்ளனர்.அத்தோடு  பல முறை ஆவேசமாக சண்டை போட்டு மோதிக் கொண்ட போதும் மீண்டும் அவர்கள் அதிக நட்பு பாராட்டியும் வந்துள்ளனர்.


மேலும் அப்படி ஒரு சூழலில், ADK எலிமினேட் ஆனதாக அறிவிக்கப்பட்டதும் அசிமை கட்டியணைத்தபடி சில உருக்கமான கருத்துக்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இதற்கடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் ADKவை பாராட்டி அசிம் அனுப்பி இருந்தார். அப்படி ஒரு சூழலில், தற்போது வெளியேறி உள்ள ADK, அசிம் குறித்து பகிரந்த ட்வீட்டில், "அசிமும் நானும் சண்டையிட்டு வாக்குவாதமும் செய்துள்ளோம். ஆனால் என்னை நம்புங்கள், ராம் மற்றும் விக்ரமன் ஆகியோருக்கு பிறகு ஒரு சிறந்த Soul ஆக எனக்கு நெருக்கம் ஆனவராக அசிம் உள்ளார். நண்பர்கள் இடையே ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement