• Mar 23 2023

விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்கும் சீரியலின் டைட்டில் என்ன தெரியுமா?- அதுவும் யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


சமீபகாலமாக சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல சூப்பர் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன்டிவி சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவை இரண்டிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களே டிஆர்பியிலும் முன்னணி வகிக்கின்றன.

அதிலும் விஜய் டிவியில் அண்மையில் மகாநதி மற்றும் சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.அதனை அடுத்து பொன்னி என்னும் சீரியலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.


இது தவிர நடிகர் விஜய்யின் தகப்பனும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சீரியலை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இதில் நடிகை ரேஷ்மா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.


அத்தோடு இந்த தொடர் சம்சாரம் அது மின்சாரம் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கு கிழக்கு வாசல் என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு இந்த சீரியலின் ப்ரோமோவும் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement