• Apr 20 2024

நடிகர் சத்யராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சத்யராஜ் சுப்பையன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும்  இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். 


மேலும் இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்.


அதுமட்டுமல்லாமல் இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.


அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழ்பவர் நடிகர் சத்யராஜ். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை.


மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, நடிகன், கடலோர கவிதைகள் என பல படங்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.


அண்மையில், இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் கூட ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தான் நடிக்கும் படங்களுக்கு ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement