இயக்குநர் ஷங்கரின் மகள் விடுத்த வேண்டுகோள் என்ன தெரியுமா?

78

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சினிமாவிற்க்குள் அடி எடுத்து வைக்கிறார். இவர் நடிக்கவுள்ள படத்திற்க்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது .சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவிற்குள் அறிமுகமாகிறார்.

இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் சினிமாவிற்க்குள் அடியொடுத்து வைத்தது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுச்சென்றுள்ளார் ஷங்கர் மகள் அதீதி.இந்நிலையில் இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடம் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்பதால் படத்தில் தனக்கு மட்டும் சோலாவான் குத்துப்பாடல் ஒன்று வேண்டும் என இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி .