• Apr 25 2024

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?- வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன்.இவர் நேற்றைய தினம் தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இவருக்கு திரையுலகைச்சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.

இது தவிர ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இவர் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்'படத்தின்'சீன் ஆ சீன் ஆ' என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்து.


‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்.


அதே போல இப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement