• Mar 25 2023

ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாகாததற்கு காரணம் என்ன தெரியுமா?- வேல்ட் டூரை திடீரென தள்ளி வைத்த அஜித்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. 

இதனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்ட் கேட்டு வந்த நிலையில், நேற்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்ட லைகா, இன்று காலை 10.30 மணிக்கு பெரிய அறிவிப்பு வர உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இதைப்பார்த்ததும் அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பை தான் லைகா நிறுவனம் வெளியிடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். 


ஆனால் லைகா நிறுவனம் இன்று காலை வெளியிட்ட பெரிய அறிவிப்பு ரஜினியின் அடுத்த படத்தினுடையது. அதாவது ரஜினியின் 170-வது படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்தனர். இதைப்பார்த்து ஷாக் ஆன அஜித் ரசிகர்கள் எப்போ தான் ஏகே 62 அப்டேட் வெளியிடுவீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இப்படியான நிலையில் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாகததற்கான காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது.அதாவது  ஏற்கனவே விக்னேஷ் சிவனிடம் படத்தின் ஒரு லைனை மட்டும் ஓகே சொன்னது போல இல்லாமல் மகிழ்திருமேனி படத்தின் கதையை முழுவதும் கேட்ட பின்னரே அதன் அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளாராம்.


அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனது வேல்ட் டூருரையும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளாராம். படத்தின் வேலைகளை ஒழுங்காக முடித்து விட்ட பின்னர் தான் வேல்ட் டூருக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளாராம். இதனால் மகிழ்திருமேனி உட்பட துணை இயக்குநர்கள் பலரும் பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இடம் எடுத்து ஏகே 62 படத்தின் வேலைகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனராம். இதனால் படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement