• Mar 26 2023

நடிகர் ரஜினிகாந்தின் மீது சத்தியராஜ் கடும் கோபத்தில் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?-இதுவரை வெளிவராத ரகசியம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90களில் கதாநாயகனாக மட்டுமல்லாது மிரட்டல் வில்லனாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் சத்தியராஜ்.இவர் ரஜினி கமல் அஜித் விஜய் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு காவேரி நீர் பிரச்சனைக்காக தமிழ் நடிகர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். அப்போது மேடையில் பேசிய சத்யராஜ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.


ஆனால் இதை குறித்து சத்யராஜிடம் கேட்டதற்கு,'நான் ராஜினிகாந்தை தாக்கி பேசவில்லை' என்று கூறினார்.இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, சத்யராஜிக்கும் ரஜினிக்கும் ஏற்பட்ட பிரச்னையை குறித்து பேசியுள்ளார்.

மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியும் சத்யராஜும் நடித்திருந்தனர். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த பிறகு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் படத்தை போட்டு காட்டியுள்ளார். அப்போது படத்தை பார்த்த ரஜினி," என்னை காட்டிலும் சத்யராஜிக்கு தான் பயங்கரமான காட்சிகள் அமைத்துள்ளது" என்று பாராட்டியுள்ளார்.



இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இப்படத்தில் 3 மணி நேரத்திற்கும் உள்ளதால்,படத்தை 2.30 மணி அளவிற்கு குறைத்துள்ளார். இதனால் சத்யராஜ் நடித்திருந்த பல காட்சிகள் நீக்கப்பட்டது.

இதை அறிந்த சத்யராஜ் ," ஏன் என்னுடய காட்சிகளை நீக்கிவிட்டீர்கள்? என்று இயக்குநரிடம் கேட்டுள்ளார். அதற்கு இயக்குநர், " படத்தில் ஹீரோவாக நடித்த ரஜினிகாந்தின் காட்சியை நீக்க முடியாது. நீங்கள் நடித்திருந்த காட்சி கதைக்கு தேவையில்லாமல் இருந்தது. அதனால் தான் நீக்கினேன்" என்று பதில் அளித்துள்ளார்.

ஆனால் சத்யராஜ், இதற்கெல்லாம் காரணம் ரஜினிகாந்த் தான் என்று நினைத்து கொண்டாராம். இவ்வாறு தான் சத்யராஜிக்கு ரஜினி மேல் வெறுப்பு உண்டானதாம் என்று கூறப்படுகின்றது.   


Advertisement

Advertisement

Advertisement