• Apr 20 2024

எல்லா தமிழ் படங்களும் காஷ்மீரில் எடுப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?- இப்படியொரு சலுகை இருக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார். இதில் த்ரிஷா நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் மற்றும் நடிகர் அர்ஜுன்,  பிரியா ஆனந்த்,மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தீவிரமாக காஷ்மீரில் நடந்து வருகின்றது.இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படக்குழு கடுமையாக உழைத்து வருகின்றது.  இப்படத்தின் படப்பிடிப்பை நான்கே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதற்கு ஏற்றார்போல் செம்ம ஸ்பீடாக ஸ்கெட்ச் போட்டு ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். 


மேலும் சில நாட்களாக யார் காஷ்மீருக்குச் சென்றாலும் அவர்களும் லியோ படத்தில் நடிக்கிறார்கள் என்ற வதந்தி எழும்பி வருகின்றது. அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் லெஜண்ட் சரவணனும் சுற்றுலாவுக்காக காஷ்மீருக்கு சென்ற போது அவரும் லியோ படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என லியோ படக்குழு தரப்பிலிருந்து அறிவித்துள்ளது.


இது ஒரு புறம் இருக்க சமீபகாலமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புக்களும் காஷ்மீரில் நடப்பதற்கான காரணம் குறித்து வெளியாகியுள்ளது. அதாவது காஷ்மீர் சுற்றுலாத்தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்வதால் அங்கு ஷுட்டிங் நடத்துபவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுகின்றதாம். இதனால் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகின்றதாம்.லியோவை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்தகேயன் நடிக்கும் அடுத்த படமும் காஷ்மீரில் தான் படமாக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement