• Mar 28 2024

ரசிகர்களை பார்க்க வந்த நடிகர் விஜய் அணிந்திருந்த வெள்ளை சட்டை சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் தற்பொழுது வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் நிறைவடைந்தது.அப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

மேலும் நடிகர் விஜய் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் நேற்று பனையூரில் அவரது அலுவலகத்தில் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த சில ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்காக நடிகர் விஜய் நேற்று தனது அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். இனோவா கிரிஸ்டா காரில் ரசிகர்களின் ஆரவாரத்தோடு  "அழகிய தமிழ்மகனாக " வந்திறங்கிய  நடிகர் விஜய், வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார்.


பார்ப்பதற்கு மிக ஸ்டைலாகவும் சிம்பிளாகவும் அவர் அணிந்து வந்திருந்த உடை, காணப்பட்டாலும் அவர் அணிந்து வந்திருந்த வெள்ளை சட்டையும்  அந்த பிராண்டும் அதன் விலையும் நம்மை மெர்சலாக செய்கிறது

விஜய் அணிந்து வந்த  BURBERRY பிராண்ட் வகை வெள்ளை சட்டையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த சர்ட்டின் விலை 32ஆயிரத்து 790  ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் ஒரு மாத ஊதியம் அந்த சட்டையின் விலை என்பது நடிகர்களின் செல்வ செழிப்பை காட்டுவதாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement