• Apr 25 2024

போடுடா வெடிய- துணிவு படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் ஆகிய நகர்களில் இப்படத்தின் படப்பிடிப்பானது நடைபெற்றது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார்.இவர்களுடன் பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்துள்ளார். 


 மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் சிபி ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார்.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்திருக்கிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணியாற்றி உள்ளார்.

துணிவு படம் உலகமெங்கிலும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. படத்தில் அஜித்தின் பெயர் AK என்றும், அதுவும் கடைசியில் தெரியவரும்படி அமைக்கப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

துணிவு படத்தின் கேரக்டர் அறிமுக போஸ்டர்களிலும் அஜித்தின் கேரக்டர் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், அஜித் கேரக்டர் பெயர் AK என தகவல் வெளியாகி இருப்பது  ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement