சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முக ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி விடுத்துள்ள கோரிக்கை என்ன தெரியுமா?

102

தமிழ் சினிமாவில் தற்பொழுது மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடுஇவர் நடிக்கும் படங்கள் ஹிட்டடித்து வருவதும் தெரிந்ததே.

மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.இதனால் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தேசிய கட்சியின் தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றமையும் தெரிந்ததே.

அத்தோடு ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏஆர் ரகுமான் உள்பட பல திரையுலக பிரபலங்கள் ஏற்கனவே முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து தனது கோரிக்கையும் விடுத்துள்ளார்.

அதாவது மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்! என்று பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனைத் தொடர்ந்து அடுத்து உதயநிதியும் முன்னிலையில்
  5. வயிற்றில் குழந்தையுடன் ‘முக்காலா முக்காபிலா’பாடலிற்கு நடனமாடிக்கலக்கும் சாண்டியின் மனைவி!

சமூக ஊடகங்களில்: