கமல்ஹாசனின் தற்போதைய உடல்நிலை என்ன தெரியுமா?- மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

499

தமிழில் புகழ்பெற்ற திரைப்பட நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் கமல்ஹசன் பல படங்களை இயற்றி வருகின்றார். இவர் தனது திறமையை மாறு வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பயன்படுத்தியுள்ளார்.அதன் மூலம் பேமசாகப் பேசப்படுகின்றார்.

மேலும் கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற வகையில் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதியின் கூட்டணியில்’விக்ரம்’ படம் உருவாகி வருகின்றது. , இவர் அமெரிக்காவுக்கு அண்மையில் சென்றுவந்தபோது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதனால் கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கமல்ஹாசன் சுவாச பாதையில் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் “கமலுக்கு தற்போது கொரோனா தொற்றிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருந்து வருகிறது” என தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.