• Apr 20 2024

சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என்று வந்த நடிகர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?- ஷாக்கான ரசிகர்கள்..!!

stella / 1 year ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர்கள் திரையுலகில் மிக முக்கியமானவர்கள் அவர்கள் இல்லை என்றால் பல படங்கள் ஓடாது . அதில் ஒருவர் நடிகர் மார்த்தாண்டன். பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதா ரவி நடித்த சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என கூறிக்கொண்டு பைத்தியக்காரர் போல் வருவதை பார்த்திருக்கின்றோம்.


மேலும் சில நடிகர்கள் படங்களில்  சில நிமிடங்கள் மாத்திரமே வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.அதில் ஒருவர் தான் நடிகர் மார்த்தாண்டன்.இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் அவர் வில்லன், மந்திரவாதி போலவும் நடித்துள்ளார். 


கடந்த பல வருடங்களாக அவரை திரையில் காணமுடிவதில்லை. அண்மையில் தனியார் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேந்திரன் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.அதில் இருப்பது மார்த்தாண்டன் தான் என ரசிகர்கள் வியந்துள்ளனர். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறோம் மார்த்தாண்டன் சார் என்று கூறியுள்ளார்


மார்த்தாண்டனின் புகைப்படம் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement