• Apr 25 2024

மரணித்த பிரபல நடிகர் சேதுராமனின் மகளா இது... இப்போ எப்படி உள்ளார் தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மண்ணுலகில் பிறந்த அனைவரும் எதோ ஒரு நாள் மரணித்தே தான் ஆக வேண்டும். இறைவன் நியதியும் அதுவே. இதற்கு சாதாரண மக்கள் பிரபலங்கள் வரை யாருமே விதி விலக்கானவர்கள் அல்ல. அந்தவகையில் பிரபல நடிகரான சேதுராமனின் இழப்பும் நம் யாரினாலும் ஜீரணிக்க முடியாத ஒன்று.


அதாவது தோல் நோய் மருத்துவராக பிரபலங்கள் பலருக்கும் சிகிச்சை அளித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சேதுராமன். இவர் தனது மருத்துவ பணியில் முழு ஈடுபாடு காட்டி வந்தாலும் இவருக்குள் ஒரு நடிகன் இருந்திருக்கிறான்.


அந்த ஆசையை வெளிப்படுத்தும் விதமாக சேதுராமன் 'கண்ணா லட்டுத் தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.


நடிகராக மாறியதும் தனது வேலையை விட்டு விடாது தொடர்ந்து படங்கள், மருத்துவ வேலை என மாற்றி மாற்றி தனது கனவை நோக்கி பயணித்து வந்த சேதுராமன் திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


இந்நிலையில் தந்தையை இழந்த அவரின் மகள் தற்போது எப்படி உள்ளார் என்பது குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement