• Apr 01 2023

கண்ணை நம்பாதே திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?- திரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி!

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் மு மாறன் இயக்கிய திரைப்படம் கண்ணை நம்பாதே இத்திரைப்படத்தில், ஆத்மிகா, பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்து என்ன, அடுத்து என்ன, படம் சுவாரசியமாக கதையுடன் நகர்கிறது. ஒரு திரில்லர் கதைக்கு ஏற்ற தரமான இசையை இசையமைப்பாளர் சித்திகுமார் கொடுத்து இருக்கிறார்.


இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2.15 கோடியும், உலகம் முழுவதும், 35லட்சத்தையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் வார விடுமுறை என்பதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நடிப்பு ஒரு பக்கம், அரசியல் மறுபக்கம் என தனது பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்,சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பதவியேற்றபின், நடிப்பை விட, அரசியலில் கவனம் செலுத்தி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருகின்றார்் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement