• Apr 19 2024

சிம்புவின் 48வது படத்திற்காக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் தேசிங்கு பெரியசாமி.இப்படத்தில் துல்கர் சல்மான், தொகுப்பாளர் ரக்ஷன், ரித்து வர்மா ஆகியோர் நடித்திருந்தனர் இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றிருந்தது.

இப்படத்தை அடுத்து தற்போது தேசிங்கு பெரியசாமி சிம்புவின் 48வது படத்தை இயக்கவிருக்கிறார்.இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 


இந்நிலையில் STR 48 படத்திற்காக தேசிங்கு பெரியசாமிக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.மேலும் இப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ரூ. 40 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 


இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதோடு இப்படத்திற்காக சிம்புவின் புதிய லுக் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement