• Mar 28 2023

வாரிசு நடிக்க நடிகர் ஷாம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில்  ஒளிபரப்பானது.விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வசூலில் நல்ல வரவேற்பை வாரிசு எட்டியுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் நடித்திருந்தார்கள்.இதில் இளைய அண்ணன் அஜய் ராஜேசந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஷாம் இப்படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்காக ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு விஜய்யின் குஷி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement