• Apr 19 2024

மாஸ்டர் மகேந்திரன் தளபதி நம்பரை எப்படி சேவ் பண்ணி வைச்சிருக்கிறார் தெரியுமா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நாட்டாமை என்னும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் மாஸ்டர் மகேந்திரன்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பரம்பரை, நட்புக்காக, மாஜி என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இதனை அடுத்து விழா என்னும் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் தனக்ககான ஓர் அடையாளத்தை பெற முடியவில்லை.

தொடர்ந்து இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மாஸ்டர் திரைப்படம் தான்.மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதியின் சிறிய வயது கெட்அப்பில் நடித்திருந்தனர், மகேந்திரன். தன்னை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடி இவருடைய திறமையை இந்த கதாபாத்திரம் உலகறிய வைத்தது.


மாஸ்டர்' படத்திற்கு பின், தரமான கதைகள் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.அந்த வகையில் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் உங்க போன்ல தளபதி நம்பரை எப்படி சேவ் பண்ணியிருக்கிறீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய மகேந்திரன் உண்மையாகவே என் கிட்ட அவரோட நம்பர் இல்லை. அவர் கிட்ட நானும் கேட்கல. அப்படி விஜய் அண்ணாவோட நம்பர் கிடைச்சிருந்தால் கண்டிப்பாக “வி” என்று தான் சேவ் பண்ணுவேன். ஏனென்றால் வி என்ற ஒரு எழுத்து வெற்றியையும் குறிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement