• Apr 25 2024

வெளியாகி 24 மணி நேரத்திற்குள்... 'ரஞ்சிதமே' பாடல் செய்த மாபெரும் சாதனை... எத்தனை மில்லியன் பார்வையாளர்கள் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாத் திரைப்பயணத்தில் 65 படங்களைக் கடந்து விட்ட நிலையில் 66 ஆவது படமாக வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் 'வாரிசு'. தில் ராஜு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் 'ரஞ்சிதமே' பாடல் நேற்று மாலை வெளிவந்தது. 

இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி ஆகியோர் இணைந்து பாடியுள்ளார்கள். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் சமூக வலைதளத்தில் எதிர்க்கணிய கருத்துக்களை முன்வைத்து சற்று ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது.


இந்நிலையில் கூட இந்தப்பாடல் ஆனது 2 மாபெரும் வெற்றிகளை பெற்று சாதனை படைத்திருக்கின்றது. அதாவது Youtube தளத்தில் வெளிவந்த இப்பாடல் ஆனது வெளிவந்து 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற Youtube பாடல்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளது.

அதுமட்டுமல்லாது இதுவரை காலமும் உலகளவில் பல்வேறு மொழி பாடல்கள் மட்டுமே இடம்பிடித்து வந்த இந்த வரிசையில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 24 மணி நேரத்திற்குள் பெற்று விஜய்யின் ரஞ்சிதமே பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. 


இதனை விஜய் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்த பாடல் 1.17 Million லைக்ஸ் பெற்று மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த படக்குழுவினர் பலரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement