• Apr 19 2024

தமிழைத் தாண்டி... தெலுங்கிலும் மாஸ் காட்டும் 'லவ் டுடே'... இரண்டே நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் முன்பெல்லாம் தங்கள் மொழிகளில் ஏதேனும் படங்கள் ஹிட்டானால் அதனை பிற மொழிகளில் ரீமேக் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் இயக்குநர்கள்.

ஆனால் சமீபகாலமாக ஏதேனும் ஒரு மொழி படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஹிட் ஆனால் அதனை உடனடியாக பிறமொழிகளில் டப்பிங் செய்து படமாக வெளியிட்டு வருகின்றனர்.


இதற்கு உதாரணமாக 'காந்தாரா' படத்தைக் கூற முடியும். அதாவது கடந்த மாதம் கன்னட மொழியில் மட்டும் வெளியாகி சக்கைப்போடு போட்டு வந்த இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

இதன் காரணமாக வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.400 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது அதே வழியை 'லவ் டுடே' படக்குழுவும் பின்பற்றி உள்ளது. அதாவது தமிழில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி ரிலீசான இப்படமானது இளசுகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி மூன்று வாரங்களை கடந்தும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 


இவ்வாறாக இப்படத்திற்கு கிடைத்து வரும் பெரியளவிலான வரவேற்பை பார்த்த 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு, இதன் டப்பிங் உரிமையை வாங்கி தெலுங்கில் டப் செய்து இப்படத்தினை வெளியிட்டார்.

அந்தவகையில் நேற்று முன்தினம் ரிலீசான இப்படத்தை பார்த்த ஏராளமான தெலுங்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் முதல் படத்திலேயே  முன்னணி நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டி உள்ள பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் தெலுங்கில் ரிலீசான முதல் நாளில் ரூ.2.5 கோடி வசூலித்தது. அதுமட்டுமல்லாது இப்படம் அங்கு ரிலீசான இரண்டே நாளில் 4.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement