• Apr 20 2024

ஒரே வருடத்தில் மிகப்பெரிய விநியோகஸ்தரான உதயநிதி... இதுவரை சம்பாதித்தது எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகும், நடிகராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி. அதுமட்டுமல்லாது சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்படும் இவர் தற்போது பல படங்களை வாங்கி விநியோகம் செய்து வருகின்றார். அந்தவகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான 'கலகத்தலைவன்' திரைப்படம் ஆனது ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக மாறி வருகின்றது. 

இப்படத்தினைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' என்ற படத்தில் நடித்து வரும் உதயநிதி அடுத்ததாக கமல் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக உதயநிதி பல படங்களை விநியோகம் செய்து வருவது நம் அனைவருக்கும் தெரியும்.


அந்தவகையில் ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று படங்களை வாங்கி வெளியிடும் உதயநிதியின் மீது பல விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து படங்களை வாங்கி வெளியிட்ட வண்ணம் தான் இருக்கின்றார்.

அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி வருகின்றார். அத்தோடு பல தயாரிப்பாளர்களும் உதயநிதி சரியாக கணக்கை காண்பிக்கிறார் எனவும், அவர் வெளியிடும் படங்களினால் எங்களுக்கு நிறைய லாபம் வருகின்றது எனவும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி இந்தாண்டு நவம்பர் மாதம் வரை உதயநிதி பல படங்களை விநியோகம் செய்துள்ளார். இதனால் கடந்த ஒரு ஆண்டில் உதயநிதியால் தயாரிப்பாளர்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் உதயநிதிக்கு 10 சதவீதம் அடிப்படையில் 100 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளாராம் உதயநிதி. இதனால் உதயநிதி தொடர்ந்து பல படங்களை விநியோகம் செய்து தயாரிப்பாளர்களுக்கு மேலும் லாபத்தை பெற்று தரவேண்டும் என பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement