• Apr 19 2024

6நாட்களைக் கடந்த 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்... இதுவரை செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் வெளியாகி நாடு முழுவதும் பேசுபொருளான ஒரு திரைப்படம் தான் 'தி கேரளா ஸ்டோரி'. பல தடைகளைத் தாண்டி இப்படம் வெளியாகி இருந்தாலும் ஒரு சில இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.


அந்தவகையில் இப்படத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு பலரிடமிருந்தும் கிளம்பியது. அதாவது கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.


இவ்வாறாக சர்ச்சைக்கு மத்தியில் வெளிவந்த இப்படமானது வெளியாகி 6நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் இதுவரை செய்த வசூல் விபரம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இதுவரை ரூ.68 கோடி வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement