• May 29 2023

பல தடைகளைத் தாண்டி வெளிவந்த 'தி கேரளா ஸ்டோரி... 5நாட்கள் முடிவில் செய்துள்ள வசூல் எத்தனை கோடி தெரியுமா...!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இருப்பினும் இந்த படம் பல தடைகளைத் தாண்டித் தான் வெளிவந்திருக்கின்றது.


அதாவது கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதனால் இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்ததோடு, பல எதிர்மறையான விமர்சனங்களும் கிளம்பின.


இவ்வாறாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் வெளியாகி தற்போது 5நாட்களை கடந்துள்ளது. அந்த வகையில் ஐந்து நாள்களில் இந்தியா முழுவதும் 56.86 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் 66.80 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement