• Dec 05 2023

நடிகை க்ரித்தி ஷெட்டியின் சொத்து மதிப்பு... எத்தனை கோடி தெரியுமா...!

Prema / 2 months ago

Advertisement

Listen News!

'உப்பேனா' என்ற படத்தின் மூலம் டோலிவுட்டில் தனது முதல் அடியை பதித்தவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. இந்தப் படத்தின் வாயிலாக தன் அழகாலும், நடிப்பாலும் பலரின் மனங்களை கவர்ந்தார். 

முதல் படத்திலேயே இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்த க்ரித்தி செட்டி தற்போது டோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக மாறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். இவ்வாறாக சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்ற க்ரித்தி ஷெட்டி மறுபக்கம் தனது பட வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில் 2கே கிட்ஸ் ஹீரோயினான க்ரித்தி ஷெட்டி இன்று தனது 20வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து இவர் குறித்த பல தகவல்களும் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது இவரின் சொத்து மதிப்புக் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.


அந்தவகையில் 70லட்ஷம் முதல் 80லட்ஷம் வரை சம்பளம் வாங்கி வருகின்ற க்ரித்தி ஷெட்டிக்கு 4கோடி ரூபாய் பெறுமதியான சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது. அத்தோடு மும்பை மற்றும் ஹைதராபாத்திலும் இவருக்கு வீடுகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement