• Sep 25 2023

சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி திரைப்படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். 

மேலும் செல்வராகவன், சுனில், விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.டைம் டிராவலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.


விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு நேற்றைய தினம் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது.இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த எஸ்.ஜே. சூர்யா, இப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே. சூர்யா ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement