• Apr 19 2024

நாளுக்கு நாள் எகிறும் 'பிச்சைக்காரன்-2' வசூல் வேட்டை... 4நாட்கள் முடிவில் எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

2016ஆம் ஆண்டு  விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து அதன் தொடர்ச்சியாக பிச்சைக்காரன் 2 சமீபத்தில் வெளியாகியுள்ளது.


அந்தவகையில் பிச்சைக்காரன் முதல் பாகமானது அம்மா செண்டிமென்டை மையமாக கொண்டு உருவாகியிருந்தது. ஆனால் பிச்சைக்காரன் 2 படம் தங்கை செண்டிமெண்ட், மூளை மாற்று அறுவை சிகிச்சை என செண்டிமெண்ட், ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்து விஜய் ஆண்டனியின் இயக்கத்திலேயே வெளியாகியுள்ளது


இப்படமானது வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்நிலையில் படம் வெளியாகி 4 நாட்கள் முடிவில் ரூ. 24 கோடிக்கு மேல் வசூலினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement