• Apr 25 2024

பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் எடுக்க எவ்வளவு நாளாச்சு தெரியுமா?. உண்மையை போட்டு உடைத்த கார்த்தி

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனலில் நிகழ்ச்சியில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட கார்த்தி.

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்காக முக்கிய நகரங்களில் படக்குழு ப்ரமோஷன் வேலைகளை படு ஜோராக நடந்தி கொண்டிருக்கிறது. மேலும் அதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி பல சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

திரையுலகில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து முடிக்க முடியுமா என பலரும் தயங்கிய விஷயத்தை மணிரத்னம் துணிச்சலுடன் கையில் எடுத்தார். அதுதான் அவருடைய கனவு திரைப்படமாகவும் இருந்தது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சிலர் இந்த படத்தை எடுக்க முயற்சித்தனர். எனினும் அது தற்போது மணிரத்னத்தால் மட்டுமே முடிந்தது.

ஆனால் இந்த படம் துவங்கும் சமயத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக இருந்தது. இதனால் படக்குழுவினர் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர்.மேலும்  எப்படி ஒரு நதிக்கு கடல் எங்கு இருக்கிறது என்று தெரியுமோ! அதேபோன்று நிச்சயம் மணிரத்னத்திற்கு இந்தப் படத்தை எப்படி முடிக்கவும் தெரியும் என்ற நம்பிக்கையுடன் தான், அந்தப் படத்தில் பணிப்புரிந்த அத்துணை பேரும் அவர் மீது அபரிவிதமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள்.

அந்தப் படத்தில் பணிப்புரிந்த ஒவ்வொருவரும் மணிரத்னத்துடன் இணைந்து வெறித்தனமாக பணியாற்றினர். அதனால் தான் அந்த படம் இந்த அளவிற்கு சூப்பரான வந்துள்ளது. அது மட்டுமல்ல வெறும் 120 நாட்களில் மட்டுமே பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகமும் முழுவதுமே படமாக்கப்பட்டது. அத்தோடு இந்த பிரம்மாண்ட படத்தினை வெறும் 120 நாட்களிலேயே படமாக்கப்பட்டது என சொன்னால் கூட யாரும் நம்புவதில்லை.

120 நாட்களில் இரண்டு படங்களையும் எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் அல்ல.மேலும்  இந்த படத்திற்காக நள்ளிரவு இரண்டரை மணிக்கெல்லாம் மேக்கப் போடுவதற்கு நடிகர், நடிகைகள் தயாராகி விடுவார்கள். இவர்களுக்கு மேக்கப் போடுவதற்காகவே சுமார் 30 கலைஞர்களும் ரெடியாக இருப்பார்கள். இந்த படம் முடியும் வரையில் அதில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் தங்களது தூக்கத்தை தொலைத்தது நிதர்சனமான உண்மை. அதிகாலை ஆறரை மணி அளவில் முதல் ஷார்ட் எடுக்கப்படும்.

அத்தோடு வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கும் போது பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருக்கும் அத்தனை விஷயத்தையும் மனதில் ஏற்றிக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராகி செல்வாராம். ஆனால் அங்கு சென்று பார்க்கும் போது அதைவிட மணிரத்னம் அந்த கதாபாத்திரத்தை தத்ரூபமாக உருவாக்கி வைத்திருப்பார். இப்படி படப்பிடிப்பில் நடந்த ஒவ்வொரு சுவாரசியமான விஷயத்தை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தி வெளிப்படையாக பேசி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement