• Apr 20 2024

துணிவு பட ஹிட், அஜித் எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா?- பிரபல நடிகை கூறிய விஷயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

எச்.வினோத், போனி கபூர் ஆகியோருடன் கூட்டணி அமைத்து அஜித் நடித்த 3வது திரைப்படம் தான் துணிவு. 

மேலும் இப்படம் வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு தயாராகி இருந்தது.


டிரைலருக்கே ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள், படத்திற்கு சொல்லவா வேண்டும், மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. அத்தோடு ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை கொண்டாட விமர்சனமும் அமோகமாக வந்தது.


துணிவு படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற படக்குழு படு கொண்டாட்டத்தில் உள்ளனர். எனினும் இப்படத்தில் நடித்துள்ள நடிக மஞ்சு வாரியர் படத்தை நேற்று கேரளாவில் பார்த்துள்ளார்.


அப்போது அவர் பேசும்போது, அஜித் தனக்கு போன் செய்து வாழ்த்தியதாகவும், பட ஹிட் என்பதால் படக்குழு அனைவரிடமும் அவர் பேசியதாக கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement