• Apr 20 2024

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நடிகை நமீதா... இப்போ எப்படி இருக்கார் தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் காதல் நாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் விஜய், அஜித், விஜயகாந்த், சரத்குமார் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர்.


இப்போது திரையுலகில் அவரது மார்க்கெட் தாறுமாறாக சரிந்துவிட சினிமா பக்கம் அவ்வளவாக வருவதில்லை. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தார் என்றே கூற வேண்டும்.

மேலும் மச்சான்ஸ் மச்சான் என்று கூறி தமிழக இளைஞர்களின் மனதை தனது பேச்சால் கொள்ளை கொண்ட இவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு வீரேந்திர் என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் பின் நமீதா தனது உடல் எடையை குறைத்து சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.


இருப்பினும் கடைசியாக வந்த அவரது பிறந்தநாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அவருக்கு சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்தது. மேலும் தனது கணவன், குழந்தைகளுடன் மிகவும் சந்தோசமாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதோ அந்தப் புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement

Advertisement